Categories
உலக செய்திகள்

இலங்கையில் நீடிக்கும் போராட்டம்…. பிரதமர் பதவி விலகல்…. வெளியான தகவல்….!!!!

இலங்கை நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல்வேறு மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கையின் அதிபர் கோத்தபயா ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதற்கிடையில் ஆயிரக்கணக்கான மக்கள் அந்நாட்டு அதிபர் மாளிகை முன்பு குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கொழும்புவிலுள்ள அதிபர் கோத்தபயா வீட்டிற்குள் புகுந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினர். இவ்வாறு போராட்டக்காரர்கள் வருவதற்கு முன்னதாகவே கோத்தபயா தன் குடும்பத்துடன் தப்பிச் சென்றுவிட்டார்.

போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து பிரதமர் ரணில் விக்ரம சிங்கே தன் பதவியை ராஜினாமா செய்தார். அதேபோன்று அதிபர் கோத்தபயா ராஜபக்சே தன் பதவியை வருகிற 13 ஆம் தேதி ராஜினாமா செய்வார் என்று தகவல்கள் கூறுகிறது. இந்நிலையில் பிரதமர் ரணில் விக்ரம சிங்கே தன் பதவியை நேற்று ராஜினாமா செய்ததை அடுத்து இலங்கையில் சர்வகட்சி ஆட்சி அமைக்கும் பணிகளில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுகளுடன் சர்வகட்சி அரசாங்கத்தை விரைவாக அமைக்க எதிர்க் கட்சிகள் தீர்மானித்துள்ளது. இந்த அரசாங்கத்தில் அமைச்சர்களின் பதவிகளின் எண்ணிக்கை 10ஆக மட்டுப்படுத்துவதற்கு அனைத்து தரப்பினரும் இணக்கம் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் அரசியல் கட்சி அமைச்சர்களுக்கு தலைவர் பதவி வழங்காமல் தலைமைகளை உள்ளடக்கிய தேசிய தலைமைத்துவ சபை உருவாக்க முடிவுசெய்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |