Categories
உலக செய்திகள்

இலங்கையில் நீடிக்கும் பொருளாதார நெருக்கடி!… அதிகரிக்கும் வாகனங்களின் விலை…. அதிர்ச்சியில் மக்கள்….!!!!

இலங்கை நாட்டில் சாதாரண ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிளின் விலையானது தற்போது ரூபாய் 8 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. அந்நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் முன்னணி கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிளின் விலை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் அங்கு புது வாகனங்களுக்கு பற்றாகுறை ஏற்பட்டு 3 லட்சத்திற்கு விற்கப்பட்ட மோட்டார் சைக்கிள் இப்போது ரூபாய் 8 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோன்று முன்னணி கார்களின் விலையும் 60 -90 லட்சம் வரை விலை அதிகரித்துள்ளது. இதனிடையில் வாகன இறக்குமதி குறைவால் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது. அதே சமயத்தில் பணவீக்கமும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இதனால் இருசக்கர வாகனம் மற்றும் கார்களின் விலையானது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |