Categories
உலக செய்திகள்

இலங்கையில் நீடிக்கும் பதற்றம்…. மீண்டும் அவசரநிலை பிரகடனம்…. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!

இலங்கையில் போராட்டம் தீவிரமடைந்துள்ள சூழ்நிலையில், அங்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. 

இலங்கை நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடியால் கடந்த சில மாதங்களாகவே அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காத சூழ்நிலையில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்களின் போராட்டத்தை அடுத்து அந்நாட்டின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபட்ச பதவி விலகினார். இதையடுத்து அதிபர் கோத்தபய ராஜபட்ச பதவிவிலக வேண்டுமென்று கோரி  வருகின்றனர். அத்துடன் மஹிந்த ராஜபட்சவுக்கு பிறகு பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்க அரசும் பொருளாதாரத்தை சரிசெய்ய முயற்சிக்கவில்லை என கூறி தற்போது மக்கள் போராட்டம் நடத்துகின்றனர். இவ்வாறு மக்களின் தீவிர போராட்டத்தை அடுத்து அதிபர் கோத்தபய, மாளிகையில் இருந்து வெளியேறி லட்சத்தீவுக்கு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

இதனிடையே கொழும்பில் கடந்த சனிக்கிழமை மாலை நடந்த அனைத்துக்கட்சித் தலைவா்கள் கூட்டத்தில், அதிபா் உடனே பதவிவிலக வேண்டுமென எம்பிக்கள் கேட்டுக் கொண்டனர். அந்த வகையில் அதிபா் கோத்தபய இன்று தனது பதவியை ராஜிநாமா செய்ய இருக்கிறார். அதன்பின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவிவிலக வேண்டும், அனைத்து கட்சிகள் அடங்கிய ஒரு அரசு அமைய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. அதிபரின் மாளிகையை அடுத்து, இப்போது பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இலங்கையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். சென்ற ஏப்ரல்மாத இறுதியிலும் இலங்கையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவசரநிலை பிரகடனத்தின் அடிப்படையில் ராணுவம் மற்றும் காவல்துறையினருக்கு கூடுதல் அதிகாரம்,  மக்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்தத்தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருகிறது.

Categories

Tech |