Categories
உலக செய்திகள்

இலங்கையில் புதிய அரசை அமைக்க… பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவிற்கு… ஆதரவு தெரிவித்த சிறிசேனா…!!!

இலங்கையில் புதிய பிரதமராக பொறுப்பேற்றிருக்கும் ரணில் விக்ரமசிங்கேவிற்கு முன்னாள் அதிபரான சிறிசேனாவின் கட்சி ஆதரவு தெரிவித்திருக்கிறது.

இலங்கையில் நிதி நெருக்கடி காரணமாக ஏற்பட்ட சிக்கலால், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகினார். ஆறாவது தடவையாக ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பொறுப்பேற்றிருக்கிறார். நாட்டில், நிதி நெருக்கடியை எதிர்கொள்வதற்கும், மக்களுக்கு தேவையான பொருட்கள் கிடைப்பதை உறுதிப்படுத்தவும் தொடர்ந்து ஆலோசனை கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்.

மேலும், ரணில் விக்ரமசிங்கே எதிர்க்கட்சியினருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். அதன்படி எதிர்கட்சி தலைவரான சஜித் பிரேமதாசாவிற்கு கடிதம் அனுப்பியிருக்கிறார். அதில், கட்சி அரசியலை ஒதுக்கி விடுங்கள். பாரம்பரிய அரசியலைத் தாண்டி கட்சி சார்பில்லாத அரசாங்கத்தை அமைக்க வரவேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார்.

ஒவ்வொரு நாளும் மோசமடைந்து கொண்டிருக்கும் நாட்டின் வருங்காலத்தை முன்னேற்ற நேர்மறையான பதில் தர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். ஆனால் அவரின் அழைப்பை சஜித் பிரேமதாசா நிராகரித்திருக்கிறார். இவரைப் போன்றே எதிர்க் கட்சியினர் சிலர் பிரதமரின் அரசாங்கத்தில் இணைய மறுத்துவிட்டனர்.

இதற்கிடையில், முன்னாள் அதிபரான சிறிசேனா, பிரதமருக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். இது குறித்து சிறிசேனா தன் கடிதத்தில், அரசை உருவாக்க இலங்கை சுதந்திரக் கட்சி ஆதரவு தெரிவிக்கும் என்று எழுதியிருக்கிறார்.

Categories

Tech |