இலங்கையில் புர்கா அணிய தடை மற்றும் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய பள்ளிகளை மூட போவதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர் அறிவித்துள்ளார்.
முஸ்லிம் பெண்கள் அணியக்கூடிய புர்கா மற்றும் முழு முகத்தையும் மறைக்கக் கூடிய முக்காடுகளை தடை செய்யப்போவதாக இலங்கை பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர் தெரிவித்துள்ளார்.மேலும் இதனைத் தடை செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதலுக்காக வெள்ளிக்கிழமை ஒரு பேப்பரில் கையெழுத்திட்டதாக கூறியுள்ளார். சமீபத்தில் தான் இது போன்ற மதவாத தூண்டுதலால் புர்கா மற்றும் முகம் மறைப்புகளை பெண்கள் அணீகின்றனர்.
ஆனால் முன்பெல்லாம் இதுபோன்ற புர்கா மற்றும் முகம் மறைப்புகளை முஸ்லீம் பெண்கள் மற்றும் சிறுமிகள் அணிய மாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். அதனால் இதனை நிச்சயமாக தடை செய்யப் போவதாக அறிவித்துள்ளார். மேலும் தேசிய கல்விக் கொள்கையை மீறும் ஆயிரக்கணக்கான மதரஸா போன்ற இஸ்லாமிய பள்ளிகளை தடை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் வீர சேகர் கூறியுள்ளார்.