தமிழ் அமைப்புகளுக்கு விதிக்கப்பட்ட தடையை அரசாங்கம் நீக்கியுள்ளது.
இலங்கையில் வாழும் பல்வேறு மக்கள் இனப் பிரச்சனை காரணமாக நாட்டை விட்டு வெளியேறி வெவ்வேறு நாடுகளில் வசித்து வருகின்றனர். இவர்கள் பல்வேறு விதமான அமைப்புகளை தொடங்கி நடத்தி வருகிறார்கள். இந்த அமைப்புகளுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக பிற நாடுகளில் வசிக்கும் இலங்கை வாழ் தமிழர்களிடம் அரசாங்கம் உதவி கோரியுள்ளது. இதன் காரணமாக தமிழ் அமைப்புகளின் மீதான தடையை அரசாங்கம் நீக்கியுள்ளது.
அதன்படி பிரிட்டிஷ் தமிழ் அமைப்பு, கனடா தமிழ் காங்கிரஸ், தமிழ் ஈழ மக்கள் பேரவை, உலகத் தமிழ் ஒருங்கிணைப்பு குழு, உலக தமிழ் அமைப்பு, ஆஸ்திரேலியா தமிழ் காங்கிரஸ் உள்ளிட்ட 6 அமைப்புகளின் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. இதேபோன்று 316 தனி நபர்களின் மீதான தடைகளும் நீக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மேலும் தமிழ் மக்களிடம் உதவியை எதிர்பார்ப்பதுதான் தடைகள் நீக்கப் பட்டுள்ளதாக பல அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.