இலங்கையில் மூன்றாம் கட்ட கொரோனா பரவல் தொடங்கியிருப்பதால் அந்நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் தற்போது மூன்றாம் கட்ட கொரோனா பரவல் தொடங்கியுள்ளது. அதனால் தற்போது வரை 4,300க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது வரை 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3,266 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதுமட்டுமன்றி கொரோனாவால் பாதிக்கப்பட்டு 973 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அந்நாட்டு அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “கம்பகா மாவட்டத்தில் இருக்கின்ற மினுவங்கொட என்ற பகுதியில் உள்ள தனியார் ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்த ஒரு பெண்ணுக்கு கடந்த மூன்றாம் தேதி கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.அதனால் அப்பகுதியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது”என்று குறிப்பிடப்பட்டுள்ளது.