Categories
உலக செய்திகள்

இலங்கையில் வெடித்த போராட்டம்…. பிரதமர் வீட்டிற்கு தீ வைப்பு…. நாட்டை விட்டு ஓடிய அதிபர்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

மக்கள் நடத்திய போராட்டத்தில் அதிபர் நாட்டை விட்டு தப்பி ஓடி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இலங்கையில் வரலாறு காணாத அளவுக்கு கடுமையான பொருளாதார தட்டுப்பாடு ஏற்பட்டதால் அத்தியாவசிய பொருள்களின் விலை அனைத்தும் அதிகரித்து விட்டது. அதோடு எரிபொருள் தட்டுப்பாடு, நீண்ட நேரம் மின் துண்டிப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகளை அந்நாட்டு மக்கள் சந்தித்துள்ளனர். இதன் காரணமாக இலங்கை மக்கள் ஒன்று திரண்டு மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தின் போது மக்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்தனர். அப்போது அங்கிருந்த பாதுகாப்பு படை வீரர்கள் பொதுமக்களின் மீது புகை குண்டுகளை வீசியதோடு துப்பாக்கிச் சூடும் நடத்தினர்.

இந்த துப்பாக்கி சூட்டில் பலத்த காயம் அடைந்த 3 பேர் மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருப்பதாகவும், 66 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்து எடுத்த பணத்தை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வீட்டிற்கு தீ வைத்து கொளுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த போராட்டத்தினால் பிரதமர் பதவியை ரணில் விக்ரமசிங்கே ராஜினாமா செய்வதாக ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், தற்போது அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் வருகிற 13-ஆம் தேதி பதவியை ராஜினாமா செய்வார் என்று சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன கூறியுள்ளார்‌. மேலும் போராட்டக்காரர்கள் இலங்கை அதிபர் மாளிகைக்குள் நுழைவார்கள் என்று ரகசிய உளவாளிகள் மூலமாக ஏற்கனவே தெரிந்து கொண்ட கோத்தப்பய ராஜபக்சே தன்னுடைய குடும்பத்துடன் தப்பி ஓடி விட்டார். அவர் தற்போது எங்கு  இருக்கிறார் என்ற  விவரம் யாருக்குமே தெரியவில்லை.

Categories

Tech |