மக்களின் போராட்டத்தை தடுக்கும் வகையில் இன்று மாலை 6 மணியிலிருந்து, 36 மணி நேரம் ஊரடங்கு உத்தரவினை இலங்கை அரசு பிறப்பித்துள்ளது.
இலங்கையில் தற்போது மிகவும் மோசமான பொருளாதார நிதி நெருக்கடியானது ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு அத்தியாவசியப் பொருட்களின் விலையானது, விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்த தொடங்கிவிட்டனர்.
இதையடுத்து மக்களின் போராட்டங்களானது, நாளை பல்வேறு இடங்களில் நடைபெறுவதாக இருந்தது. இதனால் இலங்கை அரசானது ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி இன்று மாலை 6 மணியிலிருந்து வருகின்ற திங்கள் காலை 6 மணி வரை, இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. அதன்படி இன்று மாலை 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.