Categories
தேசிய செய்திகள்

இலங்கையில் 4 நாட்களுக்கு தடை…. அரசு திடீர் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக பகுதிநேர ஊரடங்கு, இரவு ஊரடங்கு, முழு ஊரடங்கை பிறப்பித்து வருகின்றது. இந்நிலையில் இலங்கையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ரயில், பேருந்து, போக்குவரத்துக்கு ஆகியவற்றிற்கு 4 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு தொடங்கிய இந்த தடை செவ்வாய்க்கிழமை காலை வரை அமலில் இருக்கும் என்றும், சுகாதாரம், உணவு, மின்சாரத்துறை, மருத்துவம் போன்ற அத்தியாவசிய பணிகளுக்கு இந்த தடை பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுக்கூட்டங்கள், விருந்துகள் திருமணங்களுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |