Categories
உலக செய்திகள்

இலங்கையும், இந்தியாவும் ஒரு நாணயத்தின் 2 பக்கங்கள்…. அதிபர் ரணில் விக்ரமசிங்கே புகழாரம்….!!!!

இந்தியா இலங்கைக்கு ட்ரோனியர் விமானத்தை வழங்கி உள்ளது.

இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள கட்டுநாயக்க சர்வதேச விமானப்படை தளத்தில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்தியா ட்ரோனியர் விமானத்தை இலங்கைக்கு வழங்கியது. இந்த விமானம் கடல் சார் கண்காணிப்பு திறனை மேம்படுத்துவதற்காக வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அதிபர் ரணில் விக்ரமசிங்கே கலந்து கொண்டு பேசினார். அவர் முன்னாள் பிரதமர் நேரு இலங்கைக்கு செய்த உதவிகள் குறித்து கூறினார்.

அதன்பிறகு இலங்கையும், இந்தியாவும் ஒரு நாணயத்தில் இரண்டு பக்கங்கள் என்றார். இந்தியா தற்போது வழங்கியுள்ள விமானம் மூலமாக இருநாட்டு உறவையும் மேம்படுத்த வேண்டும். இந்தியாவில் ராமன் மாவீரனாக பார்க்கப்படுகிறார். ஆனால் நாங்கள் ராமன், ராவணன் ஆகிய இரண்டு பேரையும் மாவீரர்களாக பார்க்கிறோம் என்றார்.

Categories

Tech |