Categories
உலக செய்திகள்

“இலங்கையை மீட்க எங்களிடம் ஒரு திட்டம் உள்ளது”…. சஜித் பிரேமதாசா அதிரடி பேச்சு….!!!

இலங்கையில் கடும் பொருளாதாரம் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் அதிபர் கோத்தபயா ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதனையடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்தார். எனவே இலங்கையின் இடைக்கால அதிபராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நேற்று முன்தினம் பதவியேற்றார். அதனை தொடர்ந்து புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் வருகின்ற 20ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட தற்போது இடங்கால அதிபர் ரணில் விக்கிரமசிங்கே திட்டமிட்டுள்ளார்.

இதற்கிடையில் பிரதான எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாசாவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக நேற்று அறிவித்தார். மேலும் இலங்கை அதிபர் தேர்தலில் பல தலைவர்கள் களம் இறங்கி இருப்பதால் பலத்த போட்டி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் சஜித் பிரேமதாசா கூறியது, பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையை மீட்க எங்களிடம் திட்டம் இருக்கிறது. தவறான பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டாம் என இலங்கை அரசை 3 ஆண்டுகளுக்கு முன்பு எச்சரித்தோம். ஆனால் எதிர்க்கட்சிகளின் பேச்சை கேட்காததால் தான் இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்டது என்று அவர் கூறினார்.

Categories

Tech |