Categories
உலக செய்திகள்

இலங்கையை 226 நபர்கள் மண்டியிட வைத்துள்ளனர்…. ஆவேசமாக பேசிய சங்கக்காரா…..!!!!!

2.1 கோடி மக்கள் வாழக்கூடிய நாட்டை 226 நபர்கள் மண்டியிட வைத்துள்ளனர் என்று இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் சங்கக்காரா தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் நேரலையில் ஹெஷான் டி சில்வாவுடன் நடைபெற்ற நேர்காணில் இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் சங்கக்காரா கூறியதாவது “நாம் தேர்ந்தெடுத்த தலைவர்கள் மோசமான கொள்கைகளை வகுத்துள்ளனர் மற்றும் மோசமான நிதி நிர்வாகத்தை மேற்கொண்டுள்ளனர். எனினும் அதனைவிட மோசமாக அவர்கள் தங்களது சொந்தகுடிமக்களை இந்த உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் கொண்டு வந்ததற்கு கொஞ்சம் கூட வருத்தப்படவில்லை. நாட்டில் நிலவிவரும் நெருக்கடிக்கு மக்களுக்கு உடனடியாக குறுகியகால மற்றும் நீண்ட கால தீர்வுகள் தேவை. இதே அரசியல்வாதிகளை அடுத்த அடுத்த வேறு மாற்றி பணி அமர்த்துவதால் யாருக்கும் எவ்வித பயனும் இல்லை. இதன் காரணமாக எந்தபிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கப்பேவாதில்லை.

தெருவில் போராடி கொண்டிருப்பவர்கள் புதிய தலைமுறை இளைஞர்கள் ஆவார்கள். இதற்கிடையில் கூடுதல் விழிப்புணர்வுடன், விவேகத்துடன், உறுதிப்பாடுடன் மற்றும் அச்சமற்ற ஒரு புதிய சமுதாயம் ஒன்றுபட்டு இந்த இயக்கத்தைத் தொடங்கியுள்ளது. இலங்கை இந்த நெருக்கடியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு இனவாதம் மற்றும் மதப்பிளவு சமூகம் (அல்லது) அரசியலில் எப்பங்கையும் வகிக்காத ஒரு நாட்டைக் கட்டியெழுப்பும் என தான் தனிப்பட்ட முறையில் நம்புகிறேன். மேலும் ஊழலுக்கும், உறவுமுறைகளுக்கும், இலங்கை மக்களின் முதுகில் குடும்ப வம்சத்தை கட்டியெழுப்புவதற்கும் இடம் அளிக்கக் கூடாது என்றும் சங்கக்காரா தெரிவித்துள்ளார்.

https://www.instagram.com/p/Cb93MlVI2Zj/?utm_source=ig_embed&ig_rid=9b4c9568-0d42-4bdd-89f4-f80158cb7bfb

Categories

Tech |