ஆஸ்திரேலியா அணிகள் 3 வடிவிலான தொடர்களில் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது. இதையடுத்து டி20 மற்றும் ஒருநாள் தொடர் முடிவடைந்த சூழ்நிலையில் டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா அணியானது 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியடைந்தது. இருஅணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி ஜூலை 8ஆம் தேதி துவங்குகிறது.
இந்நிலையில் மேலும் இலங்கை வீரர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியின்போது மேத்யூஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை தொடர்ந்து இடதுகை சுழற்பந்து வீச்சாளரான பிரவீன் ஜெயவிக் ரமாவுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன்பின் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்..