Categories
உலக செய்திகள்

இலங்கை அதிபர் தப்பி செல்ல உதவியது இந்தியாவா?…. திட்டவட்டமாக மறுத்த மத்திய அரசு….!!!!

உள் நாட்டில் வெடித்துள்ள மக்கள் போராட்டம் காரணமாக இலங்கை நாட்டு அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டைவிட்டு தப்பினார். இதையடுத்து அவர் மாலத்தீவுக்கு குடும்பத்துடன் தப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு இந்தியா உதவி செய்ததாக சில ஊடகங்கள் தகவல் வெளியிட்டது. இதனை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்து விட்டது. இதுகுறித்து கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டது. அப்பதிவில், இலங்கையிலிருந்து கோத்தபய ராஜபக்சே வெளியேறி பயணிக்க இந்தியா உதவியதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.

இதனை இந்திய தூதரகம் திட்டவட்டமாக மறுக்கிறது. இது ஆதாரமற்றது மற்றும் ஊகத்தின் அடிப்படையிலானது என தெரிவித்துள்ளது. அத்துடன் இலங்கையில் ஜனநாயக வழிமுறைகள், மதிப்பீடுகள், ஜனநாயக அமைப்புகள், அரசியல்சாசன கட்டமைப்புகள் வழியே செழிப்பான, முன்னேற்றத்துக்கான எதிர்பார்ப்புகளை நனவாக்குவதற்கு அந்நாட்டு மக்கள் முயற்சிக்கின்றனர். இவற்றிற்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்பதை மீண்டுமாக வலியுறுத்துகிறோம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |