Categories
உலக செய்திகள்

இலங்கை: அதிபர் மாளிகையில் எடுக்கப்பட்ட ரூ. 17.85 மில்லயன் டாலர்…. நீதிமன்றத்தில் ஒப்படைப்பு….!!!!

அதிபர் மாளிகையில் இருந்து எடுக்கப்பட்ட பணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அதிபரை பதவி விலக வலியுறுத்தி போராட்டம் நடத்திய பொதுமக்கள் கடந்த 9-ம் தேதி அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். அப்போது அதிபர் மாளிகையில் இருந்து கோடிக்கணக்கில் பணம் எடுக்கப்பட்டது. இந்த பணத்தை போராட்டக்காரர்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் அதிபர் மாளிகையில் எடுக்கப்பட்ட ரூ. 17.85 மில்லியன் டாலர் பணத்தை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இது தொடர்பாக விசாரணை செய்த நீதிபதி அதிபர் மாளிகையில் இருந்து எடுக்கப்பட்ட பணத்தை உடனடியாக நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல் காலம் தாழ்த்தியது எதற்காக என்று கேட்டார். இந்த பணத்தை ஒப்படைப்பதற்கு காலம் தாழ்த்தியது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே பணத்தை ஒப்படைப்பதற்கு காலம் தாழ்த்தப்பட்டது எதற்காக என்பது குறித்து காவல்துறையினர் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் நாட்டை விட்டு தப்பி ஓடிய அதிபரின் மாளிகைக்குள் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |