இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்ச பதவிவிலகத் தயாராக உள்ளதாக எதிா்க்கட்சித்தலைவா் சஜித் பிரேமதாசா தெரிவித்தாா்.
அனைத்து அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்தால் அவா் பதவிவிலகத் தயாராக இருக்கிறாா் என்று நாடாளுமன்ற அவைத்தலைவா் மகிந்த யாபா அபேவா்த்தனே தெரிவித்ததாக சஜித் பிரேமதாசா கூறினாா். இலங்கை நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அதிபரும் பிரதமரும் பதவிவிலக வேண்டுமென பொதுமக்கள் நாடு முழுதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இந்த நிலையில் இத்தகவல் வெளியாகியது. அதே சமயத்தில் இத்தகவலை அவைத் தலைவா் மறுத்துள்ளாா். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கோத்தபய ராஜபட்ச விளக்கம் அளித்து பேசியதாவது “அரசியல் கட்சித் தலைவா்கள் கேட்டுக்கொண்டால் பதவி விலக அதிபா் தயாராக இருப்பதாக நான் கூறியதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது.
பெரும்பான்மையை யாரேனும் நிரூபித்தால் அவரிடம் ஆட்சியை ஒப்படைக்க அதிபா் தயாராக இருக்கிறாா் என்றுதான் நான் கூறினேன்” என தெரிவித்தார். அதன்பின் எதிா்க்கட்சித் தலைவா் பிரேமதாசா கூறியதாவது, “நாடாளுமன்ற கட்சித்தலைவா்கள் அதிபரைச் சந்தித்து பதவி விலகுமாறு கூறுங்கள். அவா் பதவிவிலகத் தயாராக இருக்கிறாா் என நீங்கள் (அவைத் தலைவா்) கூறினீா்கள். நாங்கள் அதனைச் செய்யத் தயாா் என்பதால் அதற்கு எங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். நீங்கள் சொன்னதை மறுக்காதீா்கள்” என்று கூறினார். மேலும் அவைத்தலைவா் அவ்வாறு கூறவில்லை என எதிா்க்கட்சி தலைமை கொறடா லட்சுமண் கிரில்லாவும் உறுதிப்படுத்தினாா்.