இலங்கையில் பிரதமர் மகிந்த ராஜபட்ச தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அமைச்சர்கள் ராஜினாமா செய்து இருப்பது மக்களைமுட்டாளாக்கும் சூழ்ச்சி என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார். ஒரு அற்புதமான நாடகம், இந்நாட்டு மக்களை முட்டாளாக்கும் அடிப்படையில் நடத்தப்படுகிறது.
இந்த சமூகத்திற்கு நல்லது செய்யவோ, நாட்டு மக்கள் அனுபவிக்கும் இன்னல்களில் இருந்து மீட்கும் நேர்மையான முயற்சியாக இது தெரியவில்லை. இது மக்களை முட்டாளாக்கும் சூழ்ச்சி என்ற ஏஎன்ஐக்கு அளித்த பேட்டியில் சஜித் பிரேமதாசா தெரிவித்தார். நாங்கள் உடனே மக்களுக்கு நிவாரணம் வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். மக்களின் வாழ்வாதாரமும், உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறுகிறோம்.