Categories
உலக செய்திகள்

இலங்கை: அமைதியான முறையில் அதிகார பரிமாற்றம்…. ஐ.நா தூதரகம் வலியுறுத்தல்…!!

இலங்கையில் அமைதியான முறையில் அதிகார மாற்றம் நடைபெற வேண்டும் என ஐநா வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருள்கள், உணவு, எரிபொருள், மருந்துகள் போன்றவற்றின் விலை அதிகரித்ததோடு தட்டுப்பாடும் ஏற்பட்டதால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி மீளா துயரில் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 9-ம் தேதி அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் மாளிகையை கொண்டு வந்துள்ளனர். இந்த தகவலை முன்கூட்டியே ரகசிய உளவாளிகள் மூலம் தெரிந்து கொண்ட கோத்தப்பய மற்றும் அவருடைய குடும்பத்தினர் மாளிகையை விட்டு வெளியேறினர்.

இவர்கள் முதலில் மாலத்தீவுக்கு சென்று அங்கிருந்து தற்போது சிங்கப்பூருக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாக உள்ளது. இந்நிலையில் மக்களின் நீண்ட போராட்டத்திற்கு பிறகு கடந்த வியாழக்கிழமை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகியதால் தற்காலிக அதிபராக ரணில் விக்கிரமசிங்கே தேர்வு செய்யப்பட்டார். இதன் காரணமாக ரணில் விக்ரமசிங்கே வீட்டை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். இவர்களை ராணுவத்தினர் கண்ணீர் புகை கொண்டு வீசி தடுத்தனர். இதன் காரணமாக இலங்கையில் தொடர்ந்து பதற்ற நிலை நீடித்து வருவதோடு அரசியலிலும் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

எனவே சட்ட ஒழுங்கை பாதுகாப்பதற்காக இலங்கையில் முப்படை ராணுவ தலைமை தளபதியின் தலைமையின் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கையில் நிலவும் அரசியல் குழப்பத்தை சமாளிப்பதற்கு அதிகார பரிமாற்றம் ஆனது அமைதியான முறையில் நடக்க வேண்டும் எனவும், அரசியல் தலைவர்கள் அதை உறுதி செய்ய வேண்டும் எனவும், தற்போது நிலவும் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும், மக்களின் தீர்க்கப்படாத குறைகளை கண்டறிந்து அவற்றை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை கண்டறிந்து அனைத்து அரசியல் உறுப்பினர்களும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என இலங்கையிலுள்ள ஐநா தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

Categories

Tech |