Categories
உலக செய்திகள்

இலங்கை அரசாங்கத்தை மாற்ற வேண்டும்…. ஐநா பொதுச்செயலாளர் அறிவிப்பு….!!!

அரசாங்கத்தை மாற்றி அமைக்க வேண்டும் என ஐநா பொதுச் செயலாளர் கூறியுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். இதனால் இலங்கை அதிபர் கோத்தப்பய ராஜபக்சே மற்றும் பிரதமர் ஆகியோர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளனர். இதனால் இலங்கை அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டு பதட்டமான சூழல் நிலவுகிறது. இது தொடர்பாக ஐநா பொதுச் செயலாளர் டுவிட்டர் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில் நான் இலங்கை மக்களுடன் ஒற்றுமையாக நிற்கிறேன். அதன் பிறகு வன்முறை செயல்களை கடுமையாக கண்டிப்பதோடு, வன்முறையில் ஈடுபடுபவர்கள் அதற்கு கண்டிப்பாக பதில் அளிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். மேலும் தற்போது உள்ள அரசியல் குழப்பங்களுக்கு உடனடியாக தீர்வு கண்டு சுமூகமான முறையில் அரசாங்கத்தை மாற்றி அமைக்க வேண்டும். மேலும் பொருளாதார நெருக்கடிக்கும் உடனடியாக தீர்வு காண்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என பொதுச் செயலாளர் அன்டோனியா குட்டரஸ் கூறியுள்ளார்.

Categories

Tech |