Categories
உலக செய்திகள்

இலங்கை அரசுக்கு ஆதரவு அளிக்குமா இந்தியா?…. ஈழத்தமிழர்களின் இழப்பு…. சோகம்…!!!

இலங்கையில் ஈழத் தமிழர்களை கொன்று குவித்த ஐநா மனித உரிமை ஆணையம் எடுக்க இருக்கும் தீர்மானம் பற்றி ஏழு உறுப்பு நாடுகள் ஆதரவளித்து இருக்கிறது.

இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு இனப்படுகொலை என்னும் பெயரில் லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தி அதற்கு தக்க தண்டனையை பெற்று தருவதற்காக உலகத் தமிழினம் மக்கள் அனைவரும் குரல் கொடுத்துக்கொண்டு வருகின்றனர். ஐ.நா மனித உரிமை மன்றம் கடந்த 15ஆம் ஆண்டு சிங்கள இனவாத படுகொலைகள் குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் அவர்களை விசாரிப்பதற்கு மனித உரிமை செயல்பாடுகளை இணைத்துக்கொண்டு அரசிடம் புலனாய்வு நடத்த என்ற தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளது.

ஐநா மனித உரிமை மன்றத்தின் தலைமை ஆணையர் இலங்கை அரசின் குற்றங்களுக்கு அந்நாட்டு ஆட்சியாளர்கள் அதிகாரிகள் ஆகியோர்களை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்றும் இந்த  நடவடிக்கையை ஐ.நா  பொது பேரவையும் பாதுகாப்பு குழுவும் எடுக்க வேண்டும் என்றும் இதனை ஐ.நா அணித உரிமை மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி செயல்பட அனைத்து உறுப்பு நாடுகளும் முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து மார்ச் 22ஆம் தேதி இலங்கை மீது போர் குற்றம் குறித்து தீர்மானம் ஐநா மனித உரிமை மன்றத்தில் விவாதத்திற்கு வரப்போவதாக தெரிவித்துள்ளனர். இதற்கு  பிரிட்டன் கனடா ஜெர்மனி வடக்கு மாசிடோனியா  போன்ற ஆறு நாடுகள் இந்தத் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டதாக கூறியுள்ளனர். இலங்கையின் மீதான  போர்க்குற்ற முழுமையானதாக நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிக்கும் வகையிலோ இல்லை ஆனால் மனிதர்களின் உயிர் இழப்பிற்கும் மனித உரிமை போராட்டத்திற்கும் எதிரியான முன்னெடுப்பாகும்.

மேலும்  தமிழர்களின் நெஞ்சில் நெருப்பை அள்ளிக் வீசும் வகையில் இந்த அரைகுறை தீர்மானத்திற்கு கூட இந்தியா ஆதரவளிக்க போவதில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் ஈழத்தமிழர்களை ஈவு இரக்கம் இன்றிக் கொன்று குவித்த பேரினவாத இனக்கொலை மீது  கொண்டு வரப்படும் தீர்மானத்தை 47 உறுப்பு நாடுகள் ஆதரிப்பதாகவும் இந்தியாவும் அதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுமென்றும் கூறியுள்ளனர்.

இந்நிலையில் இந்தியா இலங்கைக்கு  எதிரான தீர்மானத்தை ஆதரிக்க போவதில்லை என்றும் இலங்கை அரசைதான் ஆதரிக்கும் என்றும் இலங்கை வெளியுறவுத்துற செயலாளர் ஜெயநாத் கிலம்பவே உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 8 கோடி மக்களின் இதயக் குமுறலை அலட்சியப்படுத்திவிட்டு தமிழினத்திற்கு எதிராக துரோகம் செய்யும் மத்திய அரசான பா.ஜ.க.வை  வன்மையாக கண்டிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அவ்வாறு செய்பவர்களை தமிழர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |