தீவுநாடான இலங்கை நாட்டில் 75 வருடகால வரலாற்றில் இல்லாத அடிப்படையில் பொருளாதாரம் முற்றிலுமாய் சீர்குலைந்து விட்டது. அத்துடன் அன்னிய செலாவணி கையிருப்பானது குறைந்து, இறக்குமதிக்கும் வழி இல்லாமல் போய்விட்டது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கையானது கேள்விக்குறியானது. தற்போது அங்கு நிலவி வரும் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சேவே காரணம் என கூறும் அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். சென்ற வெள்ளிக்கிழமை அன்று அதிபர் கோத்தபயராஜபக்சே அவசர நிலையை பிரகடனம் செய்தும், எந்தவொரு பயனும் அளிக்கவில்லை. இலங்கை நாட்டில் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையில் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் அந்நாட்டு ராணுவம் சிறப்பு பாதுகாப்பு வழங்கி வருகிறது.
இந்நிலையில் மகிந்தராஜபக்சே தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்து இருக்கிறார். இதனிடையில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல் வெடித்தது. அவ்வாறு ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் வன்முறையினை தூண்டியதால் இலங்கையானது பற்றிஎரிந்தது. அம்பன் தோட்டாவிலுள்ள கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே போன்றோரின் குடும்ப வீட்டை போராட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தினர். இதில் ஆளுங்கட்சியான இலங்கை பொதுஜன பெரமுனாவின் எம்.பி. அமரகீர்த்தி அத்துகோரளாவும், அவரது பாதுகாவலரும் பலி ஆகினர். இந்த வன்முறைகளில் மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். பலநூறு பேர் பலத்த காயமடைந்தனர். இதற்கிடையில் 217 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அதன்பின் கலவரத்தில் ஈடுபடுவோரையும், பொதுச்சொத்துகளை சேதப்படுத்துவோரையும் சுட்டுத்தள்ள உத்தரவு பிறப்பித்து முப்படைகளுக்கு இலங்கை அரசு அதிகாரம் வழங்கியுள்ளது.
இந்த சூழ்நிலையில் திருகோணமலை தீவு ஒன்றில் ராஜபக்சே குடும்பம் மற்றும் முக்கியமான முன்னாள் மந்திரிகள் தங்கி உள்ளனர் என்று கூறுப்படுகிறது. இந்த நிலையில் அந்நாட்டு மத்திய வங்கியின் கவர்னரான பி.நந்தலால் வீரசிங்கே செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, இலங்கையில் 2 தினங்களில் புது அரசு அமையா விட்டால் பொருளாதாரம் சீர்குலைந்து விடும். அடுத்த 2 வாரங்களில் அரசியல் கட்சிகள் ஸ்திரத் தன்மையை உறுதிப்படுத்தவில்லையெனில் நான் மத்திய வங்கியின் கவர்னர் பதவியிலிருந்து விலகுவேன் என்று கூறினார். இலங்கையில் ஏற்பட்டு வரும் பதற்ற நிலையை தணிக்கும் அடிப்படையில் அங்கு ஊரடங்கு நடைமுறைபடுத்தப்பட்டது. இந்நிலையில் இலங்கை முழுதும் நடைமுறைபடுத்தப்பட்ட ஊரடங்கில் தளர்வு அளித்து இலங்கை அரசு அறிவித்து இருக்கிறது.
அந்த வகையில் காலை 7 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை தளர்வு அளிக்கப்படும் எனவும் பிற்பகல் 2 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்படும் எனவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இலங்கையில் அமைதி நிலவவேண்டும் என போப் பிரான்சிஸ் கேட்டு கொண்டுள்ளார். இருப்பினும் ராஜபக்சே அரசுக்கு எதிராக கொழும்புவிலுள்ள அந்நாட்டு நாடாளுமன்றத்தின் அருகில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 12 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர கோரி, அதற்கான பேனர்களை கைகளில் ஏந்தியவாறு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விதிகளை மீறி செயல்பட்டதற்காக அவர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்து சென்றுள்ளனர்.
அதனை தொடர்ந்து அரசுக்கு எதிரான கோஷங்கள் மக்களிடமிருந்து எதிரொலித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் எண்ணற்ற தலைவர்களின் வீடுகள் மீது அரசுக்கு எதிராக போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தும் சூழலில், கோத்தபயராஜபக்சே கூறியதாவது, ராஜபக்சேக்கள் இல்லாத இளம் அமைச்சரவையை நியமிப்பேன் என அறிவித்துள்ளார். இந்த வாரத்தில் ஒரு புது பிரதமர் மற்றும் அமைச்சரவை குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார். இந்த புது அமைச்சரவை அரசியல் சாசன சீர்திருத்தங்களை கொண்டு வரும் என கூறப்படுகிறது. இதன் காரணமாக ராஜபக்சேக்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் மனப் பான்மையில் சற்று மாற்றம் ஏற்படும். மேலும் அந்நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வுகாணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.