Categories
உலக செய்திகள்

இலங்கை: எனக்கு வீடு இல்லை… போராட்டக்காரர்களுக்கு பதிலளித்த ரணில் விக்ரமசிங்கே….!!!!!

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார மற்றும் நிதிநெருக்கடியை தொடர்ந்து சென்ற சில மாதங்களாக அந்நாடு போராட்டத்தில் சிக்கி உருக்குலைந்து போயுள்ளது. இறக்குமதியாககூடிய பொருட்களை வாங்ககூட போதிய நிதி வசதி இல்லாத நிலையில், உணவு, எரிபொருள், உரம் ஆகிய பொருட்களின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகள் உதவிக் கரம் நீட்டியுள்ளது. கிடைக்கும் பொருட்களை வாங்ககூட மக்கள் நாள்கணக்கில் நீண்ட வரிசையில் நின்று பெற்று செல்லகூடிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே பதவியிலிருந்து விலகினார்.

புது அதிபராக ரணில் விக்ரம சிங்கே பொறுப்பேற்று கொண்டார். இருப்பினும் மக்கள் போராட்டம் முடிவுக்கு வரவில்லை. மேலும் அந்நாட்டில் நெருக்கடிக்கும் தீர்வு எட்டப்படவில்லை. அதிபர் ரணில் விக்ரம சிங்கேவையும் பதவியிலிருந்து விலக கோரி போராட்டக்காரர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கண்டி நகரில் பேசிய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, சிலர் நான் வீட்டுக்கு போக வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்த போகிறோம் என அச்சுறுத்தல் விடுகின்றனர். போராட்டக்காரர்களுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். நீங்கள் போராட்டத்தில் ஈடுபடவேண்டாம். ஏனென்றால் எனக்கு செல்வதற்கு வீடு எதுவுமில்லை. என்னை வீட்டுக்கு செல்லும்படி வலியுறுத்துவது என்பது நேரம் வீணடிக்கும் செயல் ஆகும்.

அதற்கு பதில் போராட்டக்காரர்கள் எரிந்துபோன எனது வீட்டை கட்டியெழுப்ப முயற்சிக்க வேண்டும் என்று விக்ரம சிங்கே கூறியுள்ளார். அத்துடன் அவர் தொடர்ந்து கூறியதாவது, வீடு எதுவுமில்லாத ஒருவரிடம் சென்று வீட்டுக்கு போகும் படி கூறுவதில் எந்த அர்த்தமும் இல்லை. என் வீடு மீண்டும் கட்டப்பட்ட பிறகு, போராட்டக்காரர்கள் என்னிடம் வீட்டுக்கு போகும்படி வலியுறுத்தலாம் என அவர் கூறியுள்ளார். ஒன்று போராட்டக்காரர்கள் நாட்டை கட்டி எழுப்பவோ (அல்லது) எனது வீட்டை மீண்டும் கட்டியெழுப்பவோ செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். நாட்டில் போராட்ட சூழலால் ஏற்பட்டுள்ள அமைதியற்ற நிலையால், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பணம் பெறுவதற்கான சாத்தியப்பட்ட ஒப்பந்தம் தள்ளிபோய் கொண்டே இருக்கிறது என்று சுட்டி காட்டிய ரணில், பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு மீண்டெழுவதற்கு அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து பணிபுரிந்து நிரந்தர தீர்வுகளை கண்டறியவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Categories

Tech |