இலங்கை நாடு சென்ற சில மாதங்களாக பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் போராட்டங்கள் காரணமாக அந்நாட்டில் சுற்றுலாதுறை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கை நாட்டில் சென்ற மாதம் அதிகளவில் சுற்றுலா பயணிகள் எந்நாட்டில் இருந்து வந்தனர் என்ற தகவலை அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.
அந்த வகையில் இலங்கைக்கு கடந்த மாதம் இந்தியாவிலிருந்து அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து உள்ளனர். இந்தியாவிலிருந்து 5 ஆயிரத்து 562 பேர் இலங்கைக்கு சுற்றுலா பயணிகளாக வந்துள்ளனர் என்று சுற்றுலாத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக இங்கிலாந்திலிருந்து 3 ஆயிரத்து 723 பேர் இலங்கைக்கு சுற்றுலா பயணிகளாக வந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.