Categories
உலக செய்திகள்

இலங்கை கடற்படையின் அடாவடி…. தமிழக மீன்பிடி படகுகள் ஏலம்….!!

இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் மீன்பிடி படகுகள் ஏலம் விடப்படுகின்றன.

இலங்கையில் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அவர்களின் படகுகள் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து இன்று காலை 9 மணி முதல் ராமநாதபுரம் , புதுக்கோட்டை உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகர் கடற்படை முகாமில் ஏலம் விடப்படுகின்றன.

இந்த ஏலத்தில் கொழும்பிலுள்ள இலங்கை மீன்வளத்துறை உயரதிகாரிகள், யாழ்ப்பாணம் மீன் வளத் துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இந்திய அரசு, தமிழ்நாடு அரசு ஆகியவற்றின் எதிர்ப்பை மீறி இலங்கை கடற்படை அதிகாரிகள் முன்னிலையில் தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம் விடப்படுகின்றன.

இந்த மீன்பிடி படகுகள் ஒவ்வொன்றும் பல லட்சக்கணக்கான ரூபாய் விலை மதிப்பு கொண்டவை ஆகும். தமிழக மீனவர்கள் கச்சத்தீவு அருகே உள்ள இந்திய பகுதியில் மீன் பிடிக்கும்போது இலங்கை கடற்படை தாக்குவதும், படகுகள் பறிமுதல் செய்வதும் தொடர்ச்சியாகியுள்ளது.

Categories

Tech |