Categories
தேசிய செய்திகள்

இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு…. உயிர் தப்பிய மீனவர்கள்…!!!

மன்னார் வளைகுடா அருகே பாம்பன் விசைப்படகு மீனவர்கள் மீது இலங்கை துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவை சேர்ந்த மீனவர்கள் எல்லைகளைத் தாண்டி தருவதாக கூறி இலங்கை கடற்படையினர் மீனவர்களை சிறைபிடித்து செல்வது துப்பாக்கிச்சூடு நடத்துவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. பல மீனவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து பலமுறை பேச்சுவார்த்தை நடத்தப் பட்ட போதும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் உள்ளது.

இதே போல் தான் தற்போது, மன்னார் வளைகுடா அருகே பாம்பன் விசைப்படகு மீனவர்கள் எல்லை தாண்டியதாக கூறி மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் திடீரென்று துப்பாக்கி சூடு நடத்த ஆரம்பித்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக 9 மீனவர்கள் உயிர் தப்பினர். மேலும் இந்த துப்பாக்கிச் சூட்டில் மீனவர்களின் விசைப்படகுகள் சேதம் அடைந்துள்ளது.

Categories

Tech |