Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இலங்கை தமிழர்களுக்கு…. 31 லட்சத்திற்கு நலத்திட்ட உதவிகள்…. பங்கேற்ற சுற்றுலாத்துறை அமைச்சர்….!!

இலங்கை தமிழர்களுக்கு சுமார் 31 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சுற்றுலா துறை அமைச்சர் வழங்கியுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் உள்ளது. இங்கு 408 குடும்பங்களை சேர்ந்த சுமார் 1060 இலங்கை தமிழர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்காக நலத்திட்ட உதவிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவாணன் வழங்கியுள்ளார். அப்போது 19 லட்சத்து 88 ஆயிரம் ருபாய் மதிப்பிலான பாத்திரங்கள், துணிகள் மற்றும் 47,430 ரூபாய் மதிப்பிலான விலையில்லா சமையல் எரிவாயு இணைப்பு ஆகியவற்றை இலங்கை தமிழர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து 9 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தல 1,25,000 வீதம் மொத்தம் 11 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயை அமைச்சர் வழங்கியுள்ளார்.  இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங் தலைமை தாங்கியுள்ளார். மேலும் எம்பிக்கள் கே.ஆர். என். ராஜேஷ்குமார், ஏ.கே.பி. சின்ராஸ், திருச்செங்கோடு உதவி கலெக்டர் இளவரசி, பரமத்திவேலூர் தாசில்தார் அப்பன் ராஜ், மகளிர் திட்ட இயக்குனர் பிரியா, இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் தனி தாசில்தார் சுந்தரவள்ளி, முன்னாள் எம்எல்ஏ மூர்த்தி உட்பட பலரும் பங்கேற்றுள்ளனர்.

Categories

Tech |