தமிழக அரசு 317 கோடி ரூபாய் இலங்கை தமிழர் மறுவாழ்வு பணிகளுக்காக ஒதுக்கியுள்ளது.
சென்னை அருகே புழல் காவாங்கரையில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சிறுபான்மை நல அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டார்.
அப்போது அந்த நிகழ்ச்சியில், அரசு சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். பின்னர் அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், தமிழகம் முழுவதும் உள்ள 106 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்பட்டு வருகிறது. அந்தத் திட்டங்களுக்காக தமிழக அரசு 317 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.