தமிழக சட்டமன்ற கூட்ட பேரவையின் போது தமிழகத்திலுள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன் முதற்கட்டமாக சென்னை புழல் காவாங்கரையில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறுபான்மையினர் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் அரசின் பல்வேறு நல திட்டப் உதவிகளை அமைச்சர் வழங்கினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் முழுவதும் 106 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளது. அனைத்து முகாம்களுக்கும் பல்வேறு நலத் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்காக தமிழக அரசு ரூ.317 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.