Categories
உலக செய்திகள்

இலங்கை: தாக்குதல் நடத்த பிளான் போடும் விடுதலைப்புலிகள்…. லீக்கான தகவல்….!!!!

கடந்த 2009 ஆம் வருடம் மே 18ஆம் தேதி இலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான போர் முடிவுக்கு வந்தது. அப்போது இருந்து முள்ளி வாய்க்காலில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதனால் மே 18ஆம் தேதியை முள்ளிவாய்க்கால் நினைவு தினமாகவும், இனப்படுகொலை நினைவு தினமாகவும் தமிழ் அமைப்புகள் அனுசரித்து வருகிறது. இதனிடையே இதுகுறித்து இந்தியாவை சேர்ந்த ஒரு ஆங்கில பத்திரிகை, இந்திய உளவு அமைப்புகள் கூறியதாக ஒரு பரபரப்பு செய்தி வெளியாகியது. வெளி நாடுகளில் வசிக்கும் பலநாட்டு தொடர்புடைய புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களில் சிலர் தற்போதைய இலங்கை கலவரத்தில் தங்களது இருப்பை உணர்த்த முயற்சி செய்து வருவதாக அதில் கூறப்பட்டிருந்தது.
மே 18ஆம் தேதி முன்னாள் விடுதலைப்புலிகள் இலங்கை நாட்டில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும், விடுதலைப் புலிகளின் முக்கியமான தலைவர்களது படுகொலைக்கு பழிவாங்க சதித்திட்டம் தீட்டியிருப்பதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது. இப்போதைய அதிபர் கோத்தபயராஜபக்சே இனப்படுகொலை குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இச்செய்தி இலங்கை ராணுவத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை ராணுவ அமைச்சகமானது நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது “இந்திய உளவு அமைப்புகளிடம் அச்செய்தி பற்றி கேட்டோம்.
அதற்கு பொதுவான தகவலாக அதனை வெளியிட்டு உள்ளதாகவும், மேல் விசாரணை மேற்கொண்டு இலங்கையிடம் தகவல் தெரிவிப்பதாகவும் இந்திய உளவு அமைப்புகள் தெரிவித்தது. எனினும் இத்தாக்குதல் செய்தியும், தேச பாதுகாப்பு குறித்து கிடைத்த அனைத்து உளவு தகவல்களும் உரியமுறையில் விசாரிக்கப்படும். இதனிடையே நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |