Categories
உலக செய்திகள்

இலங்கை துறைமுகம்… 3 ரஷ்ய போர்க் கப்பல்கள்… வெளிவந்த உண்மை…!!!

இலங்கை துறைமுகத்திற்கு வந்த மூன்று ரஷ்ய போர்க் கப்பல்கள் குறித்த உண்மை வெளியாகியுள்ளது.

இலங்கையின் தெற்கு பகுதியில் இருக்கின்ற ஹம்பாந்தோட்டா துறைமுகத்திற்கு நேற்று முன்தினம் ரஷ்யாவின் மூன்று போர்க்கப்பல்கள் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. அந்தத் தகவலை இலங்கை கடற்படை தற்போது உறுதிப்படுத்தியுள்ளது. இதுகுறித்து இலங்கை கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், ” ரஷ்ய நீர்மூழ்கி கப்பல்களான அட்மிரல் டிரிபக், அட்மிரல் வினோகிராடோவ் மற்றும் போரிஸ்புட்டோமா ஆகியவை ஹம்பாந்தோட்டா துறைமுகத்திற்கு நேற்று முன்தினம் வந்துள்ளன.

அந்தக் கப்பல்கள் எரிபொருள் நிரப்புவதற்காகவும் மற்றும் மாலுமிகள் ஓய்வு எடுப்பதற்காகவும் வந்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ரஷிய மாலுமிகளின் நடவடிக்கைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. ரஷ்யாவின் அந்த 3 போர்க் கப்பல்களும் நாளை துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் செல்ல உள்ளன” என்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Categories

Tech |