இலங்கை நாடாளுமன்றத்தை திடிரென்று கலைத்தார், அந்நாட்டின் அதிபரான கோத்தபய ராஜபக்சே, அப்பொழுது அவர் தேர்தல் நடைபெறும் தேதியையும் தெரிவித்தார்.
இலங்கைக்கு 2015ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதை தொடர்ந்து அத்தேர்தல் முடிவில் செப்டம்பர் மாதம் புதிய ஆட்சி பொறுப்பேற்றது. ஆட்சிக்காலம் முடிவதற்கு இன்னும் 6 மாதங்கள் இருக்கும் நிலையில், அந்நாட்டின் அதிபர் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக நேற்றிரவு திடீரென அறிவிப்பு விடுத்தார்.
இந்நிலையில் அரசாணையும் உடனடியாக வெளியானது. ஏப்ரல் 25ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் எனவும், மே 14ம் தேதி முதல் கூட்டத்தொடர் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை அடுத்து வருகிற 12ம் தேதி முதல், 19ம் தேதி வரை, இத்தேர்தலுக்கான வேட்புமனு தக்கலை செய்யலாம் எனவும் தெரிவித்தார்.இலங்கையின் பிரதமராக மகிந்தா ராஜபக்சே இருந்து வரும் நிலையில், 225 உறுப்பினர்கள் இருக்கும், நாடாளுமன்றத்தில் 3-2 பங்கு பெரும்பான்மை தேவை என்று முன்னாடியே தெரிவித்திருந்தனர். வெற்றி வாய்ப்பு அதிகம் பெறலாம் என்ற எண்ணத்தின் அடிப்படையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது எனவும் தகவல் வெளியாகிள்ளது.