பாகிஸ்தான் நிதி மந்திரி முஃப்தாஸ் இஸ்மாயில் அந்த நாட்டின் செய்தி நிறுவனத்திற்கு நேற்று சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் பேசும்போது, பெட்ரோலிய பொருட்களுக்கு வழங்கப்படும் மானியத்தை ரத்து செய்யும்படி சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு 19 ரூபாய், டீசல் லிட்டருக்கு 53 ரூபாயும் அரசு மானியம் வழங்குகிறது. மேலும் இலங்கையும் இதே போல தான் மக்களுக்கு மானியம் வழங்கி உள்ளது. ஆனால் தற்போது இலங்கை திவாலாகி விட்டது பெட்ரோல் மின்சார விலையை உயர்த்தவில்லை என்றால் நாடு திவால் நிலைக்கு தள்ளப்படும்.
மேலும் பெட்ரோலிய பொருட்களின் மீதான மானியத்தை ரத்து செய்து விலையை அதிகரிக்கவில்லை என்றால் சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு நிதி உதவிகளை வழங்காது. இவ்வாறு நடைபெறும் பட்சத்தில் நாடு அழிவை நோக்கி தள்ளப்படும் கடுமையான முடிவுகளை எடுங்கள் என பிரதமரிடம் நான் தெரிவித்துள்ளேன். ஆனால் பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்துவதை பிரதமர் விரும்பவில்லை. இலங்கை இன்று அதிக விலைக்கு எரிபொருளை வாங்குகிறது. மருந்து பொருட்கள் வாங்குவதற்கும் அந்த நாட்டில் பணம் இல்லை. மேலும் பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தவில்லை என்றால் இலங்கையை போன்ற நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.