இலங்கை பொருளாதாரநிலை கடும் வீழ்ச்சியை சந்தித்து இருக்கிறது. சென்ற இரண்டரை ஆண்டுகளாக இலங்கையின் பொருளாதாரநிலை தொடர்ந்து சரிந்து வருகிறது. குறிப்பாக இலங்கையில் 1 லிட்டர் பெட்ரோல் விலை 207.00 ரூபாயாக இருக்கிறது. மேலும் மேலும் சில இடங்களில் இது ருபாய் 250-ஐ தாண்டி விற்பனையாகிறது. எங்கெங்கும் வறுமை, பசி என மொத்த இலங்கையும்கடுமையான பொருளாதாரம் வீழ்ச்சி காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் அந்நிய செலாவணி கையிருப்பு கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதாவது 2.2 கோடி மக்களைக் உடைய தெற்காசிய நாடு 1948-ல் சுதந்திரத்திற்குப் பின் மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் இருக்கிறது.
இவ்வாறு கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு மின் தடையும் ஏற்பட்டுள்ளது. மேலும் மின்உற்பத்தி நிலையங்களை இயக்க அங்கு போதிய நிலக்கரி இல்லை, நிலக்கரி உற்பத்தி மையங்களும் மூடப்பட்டுள்ளது. மற்ற நாடுகளிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்யவும் வழி இல்லை. அதேபோன்று நீர் மின் நிலையங்கள் பிற மின் நிலையங்களை இயக்க எரிபொருள் இல்லை. இந்நிலையில்தான் தற்போது அங்கு மின்தடை தினசரி 10 மணிநேரம் என்ற அளவுக்கு உயர்ந்து இருக்கிறது. சென்ற மாதம் 7 மணிநேரம் என்ற அளவில் இருந்த மின் தடை தினசரி 10 மணிநேரமாக உயர்த்தப்பட்டுள்ளது. அங்கு மொத்தத்தில் 750 மெகாவாட் மின்சார தட்டுப்பாடு நிலவுவதே மின் தடைக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் 13 மணிநேர மின்வெட்டுகளை தினமும் சந்திக்க வேண்டியுள்ளது. பல்வேறு ஆஸ்பத்திரிகளில் உயிர்காக்கும் மருந்துகள் தீர்ந்து விட்டதால் வழக்கமான அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக நோயாளிகள் கடும் சிரமம் அடைந்துள்ளனர். இதற்கிடையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சேவிற்கு எதிராக போரட்டங்களை மேற்கொண்டு வருகின்றன. இருவரும் பதவிவிலக வேண்டும் என எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். அப்போதுதான் மகிந்த ராஜபக்சே என்ன நடந்தாலும் தான் பதவி விலகமாட்டேன் என்று தெரிவித்துள்ளார். தனக்கு இன்னும் ஆட்சிசெய்ய காலம் உள்ளது.
இது அரசியல் செய்வதற்கான நேரம் இல்லை, தேசத்தின் முன்னேற்றத்திற்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மேலும் அடுத்த அதிபர் தேர்தலில் மீண்டும் நாங்களே வெற்றி பெறுவோம். எங்களது அரசின் மீது பொதுமக்கள் நம்பிக்கை இழக்கவில்லை. இப்பிரச்சினையை சரி செய்வோம் என்று மகிந்த ராஜபக்சே குறிப்பிட்டுள்ளார். ஆகவே மகிந்த ராஜபக்சே பொருளாதாரம் குறித்து பேசாமல் இப்படி தேர்தல் பற்றி பேசியதை அந்நாட்டு மக்கள் பலர் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் அதிபர் கோத்தபய ராஜபட்சவின் பேஸ்புக் பக்கத்தில் அதில் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் தொடர்பான தகவல்கள் புகைப்படங்கள் வழக்கம்போல தினசரி பதிவேற்றம் செய்யப்பட்டாலும், மக்கள் கருத்துகளை பதிவிடும் வசதி மட்டும் அரசால் முடக்கிவைக்கப்பட்டுள்ளது.