Categories
உலக செய்திகள்

இலங்கை: பணவீக்கம் 21.5 % ஆக அதிகரிப்பு…. வெளியான தகவல்…..!!!!!

கடனில் சிக்கித் தவிக்கும் இலங்கை நாட்டில் பணவீக்கம் 21.5 % ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல்துறை வெளியிட்ட அறிக்கையில் இருப்பதாவது “அந்நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 17.5 % ஆக இருந்த பணவீக்கம் மாா்ச் மாதம் 21.5 சதவீதமாக அதிகரித்தது. இதன் விளைவாக உணவுப் பணவீக்கமும் பிப்ரவரியில் 24.7 சதவீதத்தில் இருந்து மாா்ச் மாதத்தில் 29.5 சதவீதமாக அதிகரித்தது.

அதிகமான பணவீக்க அளவால் உணவுப்பொருள்களின் விலை கடந்த 12 மாதங்களில் 29.5 % உயா்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக அரிசி, சா்க்கரை, பால், ரொட்டி ஆகிய மிக அத்தியாவசியமான உணவுப்பொருள்களின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |