Categories
உலக செய்திகள்

இலங்கை பயணிக்கும் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர்…. வெளியான தகவல்…!!!

ஈரான் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சரான ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன்  பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அடுத்த வாரத்தில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியாவிற்கு செல்கிறார். அங்கு டெல்லியில் உள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார். அதனைத் தொடர்ந்து, அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை அன்று இலங்கைக்கு பயணிக்கிறார்.

ஈரான் நாட்டிடம், கொள்முதல் செய்யப்பட்ட எண்ணெய்க்குரிய தொகையை சரி செய்யவும்,  இலங்கையிடமிருந்து தேயிலை ஏற்றுமதி செய்வதற்காகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் அங்கு செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் அரசு, இதற்கு அனுமதி வழங்கிய பின் ஒரு மாதம் கழித்து அவர் இலங்கைக்கு பயணிக்கிறார்.

Categories

Tech |