இலங்கையில் அரசாங்க பாடசாலைகளுக்கு இந்த மாதம் விடுமுறை வழங்கப்படுவது குறித்து முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் சிங்கள புத்தாண்டையொட்டி அடுத்த வாரம் அரசாங்க மற்றும் அரசாங்க அனுமதி பெற்று கொண்ட பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது. வருகிற 8ஆம் தேதி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதுடன், 18 ஆம் தேதி மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட இருக்கின்றன.
கொரோனா தொற்று நிலைமைகளினால் சென்ற 2021 ம் வருடத்துக்கான 3ஆம் தவணை இந்த ஏப்ரல் மாதம் வரையில் நீடிக்கப்பட்டிருந்தது. வரும் 18ஆம் தேதி முதல் இந்த ஆண்டிற்கான முதலாம் தவணை கற்கை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சகம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.