பிரபல நாட்டிற்கு இந்தியா ராணுவ வீரர்களை அனுப்ப இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் இருந்து ராணுவம் அனுப்பப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து பா.ஜ.க கட்சியின் மூத்த தலைவரான சுப்பிரமணிய சுவாமி இலங்கைக்கு இந்தியா ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளார். இது தொடர்பாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது இலங்கைக்கு இந்தியாவில் இருந்து ராணுவம் அனுப்புவது தொடர்பாக எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை என கூறியுள்ளது. இது இந்திய அரசின் நிலைப்பாட்டு தன்மைக்கு பொருந்தக் கூடியவை அல்ல எனவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கை மக்களுக்கு ஆதரவாக இந்தியா இருக்கிறது என்றும், ஜனநாயக முறைப்படி இலங்கையின் வளர்ச்சிக்காக எடுக்கப்படும் முடிவுகளுக்கு இந்தியா உறுதுணையாக நிற்கும் என இந்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறியுள்ளார்.