ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமி இலங்கை மக்களுக்காக சேமிப்பு நிதியிலிருந்து 3000 ரூபாயை ஆட்சியரிடம் வழங்கியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களை மீட்பதற்காக நிதி உதவி அளிக்க முன் வருமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
இதன் விளைவாக காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள வாலாஜாபாத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் லட்சுமி பிரியா என்ற மாணவி தனது சேமிப்பில் இருந்து மூவாயிரம் ரூபாயை ஆட்சியர் ஆர்த்தியிடம் வழங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் ருத்ரய்யா, அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டார்கள்.