இலங்கையில் ஏற்கனவே கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தற்போது எரிபொருளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பொது மக்களுக்கு பெட்ரோல் டீசல் விற்பனை அரசு தடை விதித்துள்ளது. அதாவது அத்தியாவசிய சேவைக்கு மட்டும் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. ஏற்கனவே உணவு பற்றாக்குறை நிலவு நிலையில், தற்போதைய எரிபொருள் நெருக்கடி இலங்கை மக்களை மேலும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து அரசு பொது போக்குவரத்து இயங்கும் எனக் கூறப்பட்டாலும், பல இடங்களில் பேருந்துங்கள் இயங்கவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது. இந்நிலையில் இலங்கைக்கு பெட்ரோல் டீசல் அடங்கிய இரண்டு கப்பல்கள் ஜூலை மாசம் ஆகஸ்ட் மாதத்தில் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் துணை நிறுவனமான லங்கா ஐஒசியின் தலைவர் கூறியது, ஒரு கப்பல் ஜூலை 13 முதல் 15 வரை மற்றும் 29 முதல் 30 வரை மற்றொரு கப்பல் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடைசி கப்பல் ஆகஸ்ட் 10 முதல் 15 வரை இலங்கை வந்தடையும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் மொத்தம் 11,000 ஆயிரம் மெட்ரிக் டன் டீசல், 5000 மெட்ரிக் டன் பெட்ரோல், 3000 மெட்ரிக் டன் உலை எண்ணை மற்றும் இன்னொரு மெட்ரிக் டன்ஜெட் எரிபொருள் மட்டுமே இலங்கையில் கையிருப்பதாக உள்ளது. தற்போது உள்ள டீசல் கையிருப்பு புதிய சரக்குகள் வரும் வரை அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.