இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில் அந்நாட்டு மத்திய வங்கியின் கவர்னராக இருந்த அஜித் நிவ்ராத் கப்ரால் கடந்த வாரம் தன் பதவியை ராஜினாமா செய்தார். ஏற்கனவே பொருளாதார பின்னடைவை சந்தித்துள்ள இலங்கைக்கு இது மேலும் பெருத்த அடியாக அமைந்தது.
இந்நிலையில் 2006 முதல் 2015ஆம் ஆண்டு வரை இவர் பதவியில் இருந்தபோது செய்த சில தவறுகள் தொடர்பாக கோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அஜித் நிவ்ராத் நாட்டை விட்டு வெளியேற தடை தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். அதோடு இந்த வழக்கு தொடர்பாக வருகிற 15-ஆம் தேதி கோர்ட்டில் ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளார்.