Categories
உலக செய்திகள்

இலங்கை: மீண்டும் துவங்கப்பட்ட எரிபொருள் விநியோகம்…. வெளியான தகவல்…..!!!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அரசின் சிலோன் பெட்ரோலிய கார்பரேஷனுக்கு சொந்தமான விற்பனை நிலையங்களில் சென்ற 27 ஆம் தேதி முதல் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே எரிபொருள் விற்பனை நடைபெற்று வருகிறது. அதே சமயம் இந்தியன் ஆயில் கார்பரேஷனின் (ஐ.ஓ.சி.) இலங்கை கிளையான லங்கா ஐ.ஓ.சி.யின் சில்லறை விற்பனை நிலையங்களில் மட்டுமே பெட்ரோல்-டீசல் விற்பனையானது நடைபெற்று வந்தது. இந்நிலையில் நாட்டின் நெருக்கடிக்கு தீர்வுகாண முடியாத இலங்கை அரசு பதவி விலகக்கோரி போராட்டங்கள் தீவிரம் அடைந்து வருகிறது.

இதையடுத்து அரசின் கோரிக்கையை ஏற்று இலங்கையில் சென்ற வெள்ளிக்கிழமையிலிருந்து எரிப்பொருள் விநியோகதை லங்கா ஐ.ஓ.சி நிறுத்தியது. இந்த நிலையில் இலங்கையில் மீண்டுமாக எரிபொருள் விநியோகத்தை இன்று முதல் லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் துவங்கியுள்ளது. திருகோண மலையிலிருந்து எரிபொருள் நிலையங்களுக்கான விநியோக பணிகள் துவங்கப்பட்டுள்ளது. அத்துடன் திருகோண மலையிலுள்ள லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்துக்கு சொந்தமான முனையம் 24 மணிநேரமும் இயங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Categories

Tech |