இலங்கை நாட்டில் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்போர் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக முகக்கவசம் கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்ட 2 நாட்களில் அந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுகாதார சேவைகள் துறை பொது இயக்குநா் அசேலா குணவா்த்தனா கூறியிருப்பதாவது “இப்போது நாடு முழுதும் பொதுமக்கள் பெரும் திரளாக பங்கேற்கும் நிகழ்ச்சிகள் அடிக்கடி நடந்து வருகிறது.
அதனை கருதி பொது நிகழ்ச்சிகளில் முகக்கவசம் கட்டாயமில்லை என்ற முந்தைய உத்தரவு தற்காலிகமாக திரும்பப் பெறப்படுகிறது. ஆகவே முன்பு போன்று மக்கள் பொதுநிகழ்ச்சிகளில் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்” என்று அவா் கூறினார்.