இலங்கையில் நாடு முழுவதும் அமல்படுத்த பட்டிருந்த ஊரடங்கு சட்டமானது இன்று காலை 7 மணியுடன் தளர்த்தப்பட்ட நிலையில் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வந்த காரணத்தினால் அங்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது.
இந்நிலையில் நாடு முழுவதும் அமல்படுத்த பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று 7 மணியுடன் தளர்த்தப்பட்டது. தொடர்ந்து இன்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்படும் எனவும், இந்த ஊரடங்கு நாளை காலை 6 மணி வரை இருக்கும் எனவும் இலங்கை அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது. சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.