ராமேஷ்வரத்திலிருந்து சென்ற 23-ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி சிறைபிடித்தனர். இதையடுத்து அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்நிலையில் மீனவர்களின் வழக்கு இலங்கையில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், வருகிற 12-ம் தேதி வரை மீனவர்களை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
அதையும் மீறி மீனவர்கள் சிறையிலிருந்து வெளியேவர நினைத்தால் அவர்கள் தலா 2 கோடி ரூபாய் கொடுத்தால் அவர்கள் பிணையில் விடுவிக்கப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதனை கேட்டு மீனவர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், அவர்கள் அனைவரும் யாழ்ப்பானம் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனிடையில் மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒவ்வொரு மீனவருக்கும் தலா 2 கோடி ரூபாய் பிணை வேண்டும் என்று இலங்கை நீதிமன்றம் கூறியிருப்பது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.