இலங்கையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது போன்று விண்ணை முட்டும் அளவிற்கு விலைவாசி அதிகரித்துள்ளது.
இலங்கை நாட்டில் அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு, விலை அதிகரிப்பு போன்றவற்றால் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை கொண்டாட முடியாமல் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் எரிபொருள் மற்றும் மண்ணெண்ணை வாங்க பிளாஸ்டிக் கேன்களுடன் மக்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விண்ணை முட்டும் அளவிற்கு விலை அதிகரித்துள்ளது. அத்துடன் விலை உயர்வு காரணமாக இனிப்பகம் மற்றும் துணிக்கடைகளில் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.