Categories
உலக செய்திகள்

இலங்கை: விவசாய கடன் தள்ளுபடி…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

இலங்கை நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாணாத ஆட்சியாளர்களுக்கு எதிராக பொதுமக்கள் கிளர்ச்சிசெய்து வருகின்றனர். இதன் காரணமாக அதிபர் கோத்தபய ராஜபக்சே அண்மையில் பதவி விலகினார். இதனால் பிரதமர் ரணில்விக்ரமசிங்கே, இடைக் கால அதிபராக பதவியேற்று இருக்கிறார். இதற்கிடையில் புது அதிபருக்கான தேர்தல் 20 ஆம் தேதி நடக்கிறது. கோத்தபய ராஜபக்சே பதவி விலகினாலும், எதிர்ப்பை கைவிடாத போராட்டக்காரர்கள் இடைக் கால அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராக போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

நாட்டின் ஒட்டு மொத்த அரசு அமைப்பையும் மாற்றும்வரை தங்களது போராட்டம் தொடரும் என்று அவர்கள் அறிவித்துள்ளனர். இந்நிலையில், பொருளாதார சிக்கலில் சிக்கிதவிக்கும் இலங்கை மக்களுக்கு பல சலுகைகளை ரணில்விக்ரமசிங்கே அறிவித்து உள்ளார். இலங்கை நாட்டில் 2 ஏக்கருக்கு குறைவான வயல்களை பயிரிட்ட விவசாயிகளின் கடன்கள் ரத்துசெய்யப்படும். சர்வதேச அளவில் கச்சாஎண்ணெய் விலையானது  குறைந்து இருப்பதால் பெட்ரோல் விலையும் குறைக்கப்படும். எரிப்பொருள் விநியோகத்தில் ஜூலை மாதம் கடினமான காலமாக இருக்கும்.

இருந்தாலும் டீசல் இருப்புக்கள் பாதுகாக்கப்பட்டு அனைவருக்கும் விநியோகிக்கப்படும். வரும்  ஜூலை 21 முதல் பெட்ரோலும் விநியோகிக்கப்படும். நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு, தனிமனிதர் மீதான கருத்து வேறுபாடுகளால் நாடு பாதிக்கப்படுவதற்கு இடம் அளிக்க வேண்டாம். அத்துடன் அனைத்துக்கட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும். சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) பேச்சுவார்த்தைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அதுமட்டுமின்றி வெளிநாடுகளுடனான உதவிக்கான கலந்துரையாடல்களும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது என இலங்கை அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |