இலந்தைகுளத்திற்கு உட்பட்ட பஞ்சாயத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தெற்கு இலந்தைகுளம் பஞ்சாயத்தில் மானங்காத்த கிராமத்தில் சமுதாய நல கூடத்தில் விவசாயிகளுக்கான மானிய முறையில் வேளாண்மை கருவிகள் விதைகள் வழங்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு தெற்கு இலந்தைகுளம் பஞ்சாயத்து தலைவி செல்வி ரவிக்குமார் தலைமை தாங்கி தென்னங்கன்று, மருந்து தெளிப்பான், விதைகள், பூச்சிக்கொல்லி மருந்துகள் உள்ளிட்டவற்றை விவசாயிகளுக்கு வழங்கினார்.
காய்கறி விதை தொகுப்பு 120 பேருக்கும் தோட்டக்கலை பயிர்களுக்கு இயற்கை உரம் 4 பேருக்கும் நெகிழி கூடை மற்றும் பிளாஸ்டிக் டிரம் 15 பேருக்கும் தென்னை கன்றுகள் 100 விவசாயிகளுக்கும் செடிகள், மரக்கன்றுகள் 45 பேருக்கும் வழங்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் பலர் பங்கேற்க 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.