இலவசமாக கைலாசா செல்ல விருப்பம் உள்ள நபர்கள் தங்கள் முழு விவரங்களை கைலாசா மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள் என நித்யானந்தா கூறியுள்ளார்.
நித்யானந்தா கைலாசம் என்னும் தனி நாட்டை உருவாக்கி விட்டதாக அறிவித்த நாள் முதல் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. அதற்கு தகுந்தவாறு அவரும் சர்ச்சையை கிளப்பும் வகையில் புதுப்புது அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். இதுவரை இவரது கைலாச நாடு எங்கு உள்ளது என்பதை யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை. இது மர்மமாகவே உள்ளது. ஆனால் கைலாசாவிற்கு என்று தனி நாணயம் மற்றும் ரிசர்வ் பேங்க் மட்டும் உள்ளது.
இந்த நிலையில் நித்தியானந்தா புதிய வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கைலாசா நாட்டிற்கு வருபவர்களை இலவசமாக அழைத்துச் செல்வதாகவும், அதற்காக மூன்று நாட்கள் கொண்ட இலவச விசாவிற்கு விண்ணப்பித்து, ஆஸ்திரேலியாவிற்கு வரவேண்டும்” என்றும் கூறியுள்ளார். மேலும் ஆஸ்திரேலியாவில் இருந்து மட்டுமே இந்த சேவை என்பதால் அங்கு வருகின்ற நபர்கள் ஆஸ்திரேலியா வரை தங்களது சொந்த செலவில் வரவேண்டும்.
அதன்பிறகு ஆஸ்திரேலியாவிலிருந்து கருடா என பெயரிடப்பட்டுள்ள கைலாசம் முள்ள இடத்திற்கு சிறிய விமானங்கள் மூலமாக எவ்விதக் கட்டணமும் இல்லாமல் அழைத்து வரப்படுவர் என்று கூறியுள்ளார். இது மட்டுமன்றி கைலாசா செல்ல விருப்பம் உள்ள நபர்கள் தங்களின் முழு விவரங்களை கைலாசாவின் மின்னஞ்சலுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
Nithyananda gives E-Visa to Kailasa country | கைலாசாவுக்கு இலவச விமானம்,… https://t.co/UzjM7jM1zR via @YouTube
— SeithiSolai Tamil (@SeithisolaiNews) December 17, 2020