Categories
தேசிய செய்திகள்

இலவசமாக தடுப்பூசி போடுறதனால தா இப்படி நடக்குது… பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அமைச்சர் கொடுத்த விளக்கம்…!!!

நீங்கள் இலவசமாக தடுப்பூசி போடுவதால் தான் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது என மத்திய மந்திரி ஒருவர் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவைப் பொருத்தமட்டில் தற்போது பெட்ரோல் விலை உச்சத்திற்கு சென்றுள்ளது. இது நடுத்தர மக்களை கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்த மத்திய பெட்ரோலிய இணை மந்திரி ராமேஷ்வர் டெலி நிருபர்களிடம் கூறியதாவது, ” பெட்ரோல் விலை ஆனது உயர்த்தப்படவில்லை. அதன் மீதான வரி விகிதமே அதிகரித்திருக்கிறது. அசாம் மாநிலத்தை பொருத்தமட்டில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 40 ரூபாய் ஆகும். மாநில அரசு ரூ.28 வரி விதிக்கிறது. மத்திய பெட்ரோலியத்துறை 30 ரூபாய் விதிக்கிறது. இவை அனைத்தும் சேர்த்து பெட்ரோல் விலை 98 ரூபாயாக உள்ளது.

ஆனால் சில குடிநீர் பாட்டில்களில் விலை பெட்ரோல் விலையை விட அதிகமாக உள்ளது. அதை யாரும் கண்டுகொள்வதே இல்லை. நீங்கள் எல்லோரும் இலவசமாக தடுப்பூசி போட்டுக் கொள்கிறீர்கள். அதற்கு எல்லாம் பணம் எங்கிருந்து வரும்? நீங்கள் பணம் தராவிட்டால் அந்த பணத்தை நாங்கள் பெட்ரோல் வரி விகிதத்தில்தான் வசூலித்து கொள்வோம். மற்ற மாநிலங்களை விட அசாமில் பெட்ரோல் விலை குறைவாகத்தான் இருக்கிறது. ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் பெட்ரோல் மீதான வாட் வரி அதிகமாக விதித்து இருப்பதால் அந்த மாநிலங்களில் பெட்ரோல் விலை அதிகமாக உள்ளது.” இவ்வாறு அவர் கூறினார்.

Categories

Tech |